தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் வரும் செப். 1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன் படி கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

மாணவர்கள் , பேராசிரியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டியதில்லை. ஒரு வேளை கொரோனா தடுப்பூசி போடாமல் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கல்லூரியிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்லூரியில் யாருக்கேனும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கண்டிப்பாக RT-PCR பரிசோதனை கண்டிப்பாக எடுக்கவேண்டும்.கல்லூரிகளில் உள்ள உணவகங்கள், ஆய்வு கூடங்கள் போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

Colleges reopen in Tamil Nadu, confusion about online attendance - The Hindu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *