தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு, தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு, தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.செப்.1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி. இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி. செப்.1 முதல் அங்கன்வாடி மையங்கள், மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி.

தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி.

தமிழ்நாட்டில் ஆக.23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *