இந்தியர்களின் கனவை நனவாக்கிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

இந்தியர்களின் கனவை நனவாக்கிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நூற்றாண்டுக்கு பிறகு நனவாகியுள்ளது.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தங்கம் வென்ற #NeerajChopra விற்கு 6 கோடி ரூபாய் பரிசு மற்றும் Grade 1 அரசு பணி வழங்கப்படும் ஹரியானா அரசு அறிவிதுள்ளது. பிசிசிஐ சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

மஹேந்திர குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா xuv 700 காரை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஒலிம்பிக் போட்டியாளர் பிடி உஷா நீரஜ் சோப்ராவை பாராட்டியுள்ளார். அபினவ் பின்தராவிற்கு பிறகு தங்கம் வென்ற தனிநர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *