மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்..!

மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரட்சாரங்கள் வெகு வீச்சில் நடந்து வருகிறது. மக்களை கவர வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு வகையில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜகவின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.

அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் வானதிசீனிவாசன் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் சமயங்களில் மட்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் ஏட்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *