வன்னியர் 10.5% இடஒதுக்கீடு செல்லாது-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு செல்லாது-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரபட்ட இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

MBC பிரிவில் 100க்கும் அதிகமான ஜாதியினர் உள்ளனர். MBC பிரிவில் உள்ள 20 சதவீதத்தில் 10.5 % வன்னியருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற ஜாதியினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என 100க்கும் மேற்பட்டோர் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்து வந்தது. இன்று காலை வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்றும் தெரிவித்துள்ளது.மேலும் இது அரசியலமைப்புக்கு எதிரானது, அரசு அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

High Court seeks state's response on plea for information on school  dropouts - DTNext.in

இந்த தீர்ப்பை நிறுத்திவைக்கும்படி பாமக விடுத்த கோரிக்கையும் நிராகரித்துள்ளது உய்ரநீதிமன்ற மதுரைக்கிளை, முறையான ஜாதிவாரி கணக்கெடுப்ப்பை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *