Money Heist வெப் தொடரை பார்க்க விடுமுறை அளித்த ஐடி நிறுவனம்!

Money Heist வெப் தொடரை பார்க்க விடுமுறை அளித்த ஐடி நிறுவனம்!

Netflix-ல் வரும் 3 ஆம் தேதி வெளியாகிறது money heist தொடரின் 5 ஆம் பாகம். இந்த தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இந்த தொடரை பலரும் விரும்பி பார்க்கின்றனர். இந்த நிலையில் ஜெய்ப்பூரை சேர்ந்த verve logic என்ற ஐடி நிறுவனம் ஒன்று இந்த தொடரை பார்க்க செப்டம்பர் 3 ஆம் தேதி அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அந்த நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக Work from Home மூலம் ஊழியர்கள் எங்களின் நிறுவனத்திற்கு கடுமையாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் நன்றாக உணர்கிறோம். மேலும் வரும் 3 ஆம் தேதி Money heist தொடர் வெளியாக உள்ளது.இதை பார்க்க பலரும் பொய்யான காரணங்களை கூறி விடுப்பு எடுப்பீர்கள்.

பொய்யான காரணங்களால் எங்களின் மெயில் நிரம்ப வேண்டாம் என்பதால் “Netflix and Chill Holiday” என்ற பெயரில் அணைவருக்கும் விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

இந்த தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள எதிர்பார்ப்பை நம்மால் உணர முடிகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள twitter -ல் எங்களை Follow செய்யுங்கள்

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *