மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்!

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்!

நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி காலமானார். தமிழகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிந்தார் இதன் காரணமாக அவரால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை.

விஜய் 65 படத்தின் முதல் கட்டமாக 15 நாட்கள் ஜார்ஜியாவில் நடந்தது. நேற்று படக்குழுவினர் சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில் இன்று காலை விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். விஜய் மற்றும் விவேக் ஆகியோர் ஏராளமான படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *