இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார் விராட் கோலி! புதிய கேப்டன் ஆகிறார் ரோஹித்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார் விராட் கோலி! புதிய கேப்டன் ஆகிறார் ரோஹித்!

ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள டி-20 உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக TOI போன்ற செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரராக இருப்பவர் விராட்கோலி, ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

உலகின் நம்பர் ஒன் ஒரு நாள் வீரராக இருந்தவர் விராட், ஆனால் தற்போது அணைத்து விதமான போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதனால் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதை அவரே தெரிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

சச்சின் போன்ற சிறந்த வீரர்களும் கேப்டன் பதவியில் இருக்கும் போது ரன் எடுக்க சிரமப்பட்டுள்ளனர். வீரர்களை தேர்வு செய்வது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் பேட்டிங்கில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.

Image

கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா நல்ல தேர்வாக இருப்பார். சமீப காலமாகவே இது தொடர்பான தகவல்கள் கசிந்துவந்தது. எப்படி இருப்பினும் கோலி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே கோலி ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *