உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவை காப்பாற்றிய மழை, நான்காம் நாள் ஆட்டம் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவை காப்பாற்றிய மழை, நான்காம் நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள southamption மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

ரோஹித் 34 ரன்களிலும், கில் 28 ரன்களும் எடுத்தனர். புஜாரா 8 ரன்களில் அவுட் ஆகினார் பின்னர் வந்த க்ஹோலியும் ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாம் நாள் தொடக்கத்தில் 44 ரன்கள் எடுத்து க்ஹோலி அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் ரஹானே மட்டும் 49 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் முக்கியமான நாளான இன்று காலை முதலே மழை பெய்துவந்தது . தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய போட்டி தொடங்காமலே ரத்து ஆகியுள்ளது.

இந்த மழையால் இந்திய அணிக்கு தான் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் நியூஸிலாந்து அணி மூன்றாம் நாளில் இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. போட்டி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் கட்டுப்பாட்டை விட்டு சென்று கொண்டிருந்தது.

மழை பெய்து வருவதால் இந்திய அணி தப்பித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது மேலும் 1 நாள் ரிசெர்வ் நாளாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் போட்டி ரத்து ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *