மின்சார காரில் முதலீடு செய்யும் Xiaomi நிறுவனம்!!

மின்சார காரில் முதலீடு செய்யும் Xiaomi நிறுவனம்!!

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Xiaomi நிறுவனம் Smart phones, லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், shoes, மற்றும் எண்ணற்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரித்து வருகிறது. ஆசியா மட்டுமில்லாதது உலகம் முழுவதும் Xiaomi நிறுவனம் பொருட்களை தயாரித்து வருகிறது.

தற்போது Xiaomi நிறுவனம் மின்சார காரில் (Electrical Vehicles ) முதலீடு செய்ய உள்ளது. முதல்கட்டமாக இந்திய மதிப்பில் 11000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் Xiaomi 73400 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Xiaomi நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரியாக (CEO) உள்ள Lei Jun தான் அந்த நிறுவனத்திற்கும் CEO ஆக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi நிறுவனம் மற்ற டெக் நிறுவனங்களை போலவே இந்த துறையில் கால் பதிக்கிறது. Baidu நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் முதலீடு செய்ய உள்ளதாக ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது. அதை போலவே சீனாவின் முன்னணி smart phone தயாரிக்கும் நிறுவனமான Huawei நிறுவனமும் மின்சார கார் தயாரிப்பில் காலடி பதிக்கிறது. சமீபத்தில் Apple நிறுவனமும் மின்சார கார் தயாரிப்பில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Space x நிறுவன தலைவர் Elon Musk தான் மின்சார கார் உற்பத்தியில் முதலில் முதலீடு செய்து வெற்றியும் அடைந்தார். வரும் காலங்களில் மின்சார காரின் உற்பத்தி மற்றும் தேவை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் இந்த துறையில் போட்டி போட்டுகொண்டு களம் இறங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *